23 வயசுலையே இவ்வளவு சொத்து மதிப்பா.. ஸ்ரீ லீலாவின் மொத்த சொத்து மதிப்பு..!

எந்த ஒரு நடிகைக்கு அழகு திறமை இரண்டுமே அதிகமாக இருக்கிறதோ அவர்கள் தொடர்ந்து சினிமாவில் வரவேற்பை பெறுகின்றனர். அப்படியான ஒரு நடிகையாகதான் தற்சமயம் ஸ்ரீலீலா இருந்து வருகிறார்.

ஸ்ரீ லீலா சினிமாவிற்கு வந்த சில காலங்களிலேயே அதிக பிரபலமாகிவிட்டார். சாதாரணமாக நடித்து கொண்டிருந்த அவருக்கு இவ்வளவு பிரபலம் கிடைத்திருக்காது. அவரது சிறப்பான நடனமே அவரை இவ்வளவு புகழ் அடைய செய்தது.

ஸ்ரீ லீலா எல்லா திரைப்படங்களிலும் சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர் சொல்லப்போனால் தெலுங்கு சினிமாவில் நன்றாக ஆடும் பெரிய நடிகர்கள் கூட ஸ்ரீலங்கா உடன் சேர்ந்து ஆடும்பொழுது அவரது நடனத்திற்கு ஈடு கொடுக்க முடியாது.

sree leela
sree leela
Social Media Bar

சொத்து மதிப்பு:

அவ்வளவு ஆற்றலை டான்ஸ் ஆடும் பொழுது ஸ்ரீ லீலா வெளிப்படுத்துவார் மேலும் ஸ்ரீ லீலா இளம் வயது நடிகை என்பதால் மிகவும் சுறுசுறுப்பாக நடனம் ஆடுவார். இந்த நிலையில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக இவர் நடித்த குண்டூர் காரம் திரைப்படத்தின் பாடல்கள் பெறும் வரவேற்பை பெற்றது.

அதற்குப் பிறகு ஸ்ரீ லீலாவிற்க்கு வாய்ப்புகளும் அதிகரித்தது. தற்சமயம் புஷ்பா 2 திரைப்படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார் ஸ்ரீ லீலா. இந்த நிலையில் ஸ்ரீ லீலாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்க்கும் பொழுது 15 கோடி ரூபாய் அவருடைய சொத்து மதிப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

23 வயதிலேயே 15 கோடி ரூபாய் சொத்து மதிப்பை கொண்டிருக்கும் பெரிய நடிகையாக மாறியிருக்கிறார். கிட்டத்தட்ட பல வருடங்களாக சினிமாவில் இருந்துமே கூட நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு 45 கோடி தான் இருக்கிறது.

அதை வைத்து பார்க்கும் பொழுது ஸ்ரீ லீலா சீக்கிரத்திலேயே அந்த 45 கோடியை தொட்டு விடுவார் என தெரிகிறது.