நடிகை நயன்தாரா வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.கடந்த சில காலங்களாகவே தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே பிரச்சனை என்பது சென்றுக்கொண்டு இருக்கிறது. தனுஷ் தயாரிப்பில் உருவான திரைப்படம் நானும் ரவுடிதான்
இந்தத் திரைப்படத்தின் காட்சிகளை நடிகை நயன்தாரா தனுஷின் அனுமதியில்லாமலேயே தனது ஆவணப்படத்தில் பயன்படுத்தியிருந்தார். இதற்காக தனுஷ் வழக்கும் தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் தனுஷை விமர்சித்து ஒரு பெரிய அறிக்கை ஒன்றை நயன்தாரா வெளியிட்டிருந்தார்.
அதில் முழுக்க முழுக்க தனுஷ் குறித்து நிறைய அவதூறான விஷயங்களை நயன்தாரா பேசியிருந்தார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் நயன்தாரா பேசும்போது இந்த விஷயம் குறித்து மீண்டும் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது நடிகர் தனுஷும் நானும் நல்ல நண்பர்களாக தான் இருந்தோம்.
இருவருக்கும் இருந்த நட்பு:

ஆனால் கடந்த பத்து வருடங்களாக அவருக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. யாரேனும் எங்களை குறித்து தவறாக கூறிவிட்டார்களா என்றும் புரியவில்லை. இது குறித்து தனுஷிடமே நேரில் பேச வேண்டும் என்று நான் பலமுறை முயற்சித்தேன்.
ஆனால் அவரை சந்திக்கவே முடியவில்லை. இந்த நிலையில்தான் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சிகளை அவரிடம் கேட்டிருந்தோம். அவர் கொடுக்க முடியாது என்று கூறியதால் அந்த படத்தில் விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் வரிகளையாவது பயன்படுத்திக் கொள்ள கேட்டோம்.
ஏனெனில் அந்த பாடல் வரிகள் எங்கள் இருவருக்குமே மிக முக்கியமானது ஆனால் அதற்கும் தனுஷ் ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியாக ஆவணப்பட்த்தில் நாங்கள் பயன்படுத்தியது கூட மொபைல் போனில் படப்பிடிப்பின் பொழுது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் தானே தவிர கேமராவில் எடுக்கப்பட்டது கிடையாது.
ஆனால் அதற்கும் தனுஷ் தற்சமயம் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் அதனால் தான் வேறு வழியே இல்லாமல் நான் அந்த அறிக்கையை வெளியிட வேண்டியது ஆகிவிட்டது என்று கூறியிருக்கிறார் நயன்தாரா. அறிக்கையில் மிகவும் மோசமாக தனுஷை விமர்சித்துவிட்டு இப்பொழுது நல்லவிதமாக அவர் பேசியிருப்பது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.






