நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதலே அவர் செய்து வரும் விஷயங்கள் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. விஜய் நடத்திய மாநாட்டுக்கு பிறகு அரசியல் களத்தில் எவ்வளவு சீரியஸாக விஜய் இறங்கி இருக்கிறார் என்பது அரசியல் கட்சிகளுக்கு தெரிய துவங்கியது.
அதுவரை சமூக வலைதளங்களில் கூட பெரிதாக அரசியல் கட்சிகளை எதிர்த்து பேசாத விஜய் மாநாட்டில் பேசியிருந்த விஷயங்கள் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
முக்கியமாக ஆளுங்கட்சியை விமர்சிக்கும் விதமாக எக்கச்சக்கமான விஷயங்களை விஜய் அதில் பேசியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் விகடன் அம்பேத்கர் குறித்த கட்டுரை தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.
மதூர் சத்யா:
ஆரம்பத்தில் அந்த விழாவிற்கு திரு தொல் திருமாவளவன் அவர்கள் தான் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் பிறகு திருமாவளவனுக்கு பதிலாக விஜய்யை அழைத்திருந்தனர். அங்கு வந்த விஜய் தனது அரசியல் சார்ந்த நிறைய விஷயங்களை பேசி இருந்தார்.

இந்த நிலையில் அந்த புத்தக வெளியீட்டு விழாவில் அவரிடம் இருந்து புத்தகத்தை பெற்ற மாதுர் சத்யா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார் அதில் அவர் கூறும் பொழுது விஜய்யின் மிகப்பெரிய ரசிகன் நான். விஜய்யுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக ஒரு காலத்தில் இருந்தது.
ஆனால் அன்றைய தினம் விஜய்யிடம் புத்தகத்தை வாங்கும் பொழுது அது எனக்கு அருவருப்பாக இருந்தது. ஏனெனில் அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. உதாரணத்திற்கு சச்சின் டெண்டுல்கரை பற்றி பேசுவதற்காக ஒரு விழா நடத்தி அங்கு ஒரு நபரை நாம் அழைத்து வருகிறோம்.
அந்த நபர் சச்சினின் சாதனைகளை பேசாமல் பெப்சி விளம்பரத்தில் சச்சின் நடித்தது தான் பெரிய சாதனை என்று பேசினால் எப்படி இருக்கும் அப்படி தான் இந்த நிகழ்ச்சியும் நடந்தது. அம்பேத்கர் குறித்து பேசுவதற்கு அம்பேத்கருக்கு முற்றிலும் தொடர்பே இல்லாத ஒரு நபரை அழைத்து வந்து பேச வைத்தனர் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறி இருக்கிறார் மதூர் சத்யா







