கங்குவா படத்தால் சொல்ல முடியாத வருத்தத்தில் பாக்கியராஜ்.. அவங்க திருந்தணும்..!

ரொம்ப காலமாகவே தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருந்து வருபவர் பாக்கியராஜ். ஒரு காலத்தில் லோகேஷ் கனகராஜை விடவும் பிரபலமான இயக்குனராக இருந்தவர் பாக்கியராஜ். ஆனால் காலப்போக்கில் அவருக்கு இருந்த புகழ் குறைந்துக்கொண்டே சென்றது.

ஆனால் இப்போதும் படம் எடுக்க சொல்லித்தரும் கல்லூரிகளில் ஒளிப்பரப்பப்படும் படங்களில் அவர் இயக்கிய முந்தானை முடிச்சி திரைப்படத்திற்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.

கங்குவாவுக்கு குறித்து பாக்கியராஜ்:

இந்த நிலையில் சமீப காலமாக சினிமாவின் போக்கு மோசமாக இருந்து வருவது குறித்து வருத்தப்பட்டுள்ளார் பாக்கியராஜ். மேலும் இதுக்குறித்து சமீபத்தில் அவர் மேடையில் பேசியுள்ளார்.

kanguva
kanguva
Social Media Bar

அதில் அவர் கூறும்போது தமிழ் சினிமாவில் சமீபத்தில் கங்குவா என்கிற திரைப்படம் வெளியானப்போது முதல் நாளே அந்த படம் குறித்து தவறான பிம்பத்தை உருவாக்கி விட்டனர். இதனால் அந்த படம் ஓடாமல் போனது.

இதெல்லாம் மிகப்பெரிய தவறு. ஒரு படத்தை இத்தனை வருஷம் எடுக்க அவங்க எவ்வளவு உழைச்சி இருப்பாங்க. அதுக்கு மதிப்பு இல்லாமல் பண்ணக்கூடாது. பத்திரிக்கைகள் இந்த விஷயத்தில் திருந்தணும். இவ்வாறு பேசியுள்ளார் பாக்கியராஜ்.