தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முக்கியமானவராக நடிகை நயன்தாரா இருந்து வருகிறார். பெரும்பாலும் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.
ஆனால் இப்பொழுது சமீப காலமாக நயன்தாரா நடிக்கும் திரைப்படங்கள் பெரிதாக வெற்றியே பெறவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை நயன்தாராவிற்கும் நடிகர் தனுஷுக்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டது.
நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை அவரது அனுமதி இல்லாமலேயே தனது ஆவண திரைப்படத்தில் பயன்படுத்திக் கொண்டார் நயன்தாரா.
இதனால் நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்தார் நடிகர் தனுஷ். இது தமிழ் சினிமாவில் பெரிய பிரச்சனையாக பேசப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அனுபமா சோப்ரா என்கிற பத்திரிகையாளருக்கு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார் நயன்தாரா.
அதில் பலரையும் விமர்சித்து அவர் பேசியிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து பாடகி சுசித்ரா தனது கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது அந்த பத்திரிகையாளர் அனுப்பாமா சோப்ராவே
நிறைய நடிகர்களுக்கு சொம்பு தூக்கி தான் இந்த நிலையை அடைந்திருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக நடிகர்களுக்கு சொம்பு தூக்குவதை தான் ஒரு முக்கிய வேலையாக செய்திருந்தார். அவருக்கு பேட்டி கொடுப்பதை நயன்தாரா ஏதோ பெரிய விஷயமாக நினைத்துக் கொண்டு ஏதோ ஹாலிவுட் பிரபலத்திற்கு பேட்டி கொடுப்பது போல சென்று இருக்கிறார் என்று நயன்தாராவை விமர்சித்து பேசியிருக்கிறார் சுசித்ரா.






