ஒரு நபர் பிரபலமாவதற்கு எத்தனையோ விஷயங்கள் உதவி வருகின்றன. இப்போதைய தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த காலக்கட்டத்தில் பல விஷயங்களை பின்பற்றி ஒருவர் பிரபலமாக முடிகிறது.
அப்படியாக வி.ஜே வாக இருந்து பிரபலமடைந்தவர்தான் பார்வதி. பார்வதியை பொறுத்தவரை பொதுமக்களிடம் சென்று சர்ச்சைக்குரிய கேள்வியை கேட்பதை இவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்த மாதிரியான கேள்வியெல்லாம் ஒரு பெண் கேட்குமா? என பலரும் நினைக்கும் வகையில் இருக்கும் பார்வதியின் கேள்விகள். அப்படியாக பார்வதி கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைய துவங்கினார்.
நிறைய யூ ட்யூப் சேனல்களில் இவருக்கு நல்ல வாய்ப்பும் கிடைத்தது. இந்த நிலையில் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற இவர் முயற்சித்து வருகிறார். ஆனால் சினிமாவில் பெரிய கதாபாத்திரம் என எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை.
ஆஹா ஓ.டி.டியில் வெளியான வேற மாதிரி ஆஃபிஸ் சீரிஸில் இவர் நடித்தார். ஆனால் அதிலும் சில எபிசோடுகளுக்கு பிறகு காணாமல் போய்விட்டார்.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது சாமி சிலைகளே மார்பகங்கள் தெரிவது போலதான் இருக்கின்றன. ஆனால் அதை ஏற்றுக்கொள்பவர்கள் பெண்கள் மாடர்ன் உடை போட்டால் மட்டும் திட்டுகின்றனர் என கூறியுள்ளார்.