தளபதி 67 இல் இவர்தான் கேமிராமேன் –  ரசிகர்களுக்கு மேலும் ஒரு நற்செய்தி

விஜய் நடித்து வருகிற பொங்கலுக்கு வரவிருக்கும் திரைப்படம் வாரிசு. ஆனால் வாரிசு படத்தை காட்டிலும் தளபதி ரசிகர்கள் அனைவரும் லோகேஷூடன் தளபதி இணையும் தளபதி 67க்காகவே வெறித்தனமாக காத்துக்கொண்டுள்ளனர்.

மாஸ்டர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பதால் இந்த திரைப்படமும் கூட ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Social Media Bar

இந்த நிலையில் இந்த படத்திற்கு சினிமோட்டோகிராபராக மனோஜ் பரமஹம்சாவை தேர்வு செய்துள்ளாராம் விஜய். இவர்தான் பீஸ்ட் திரைப்படத்திற்கும் சினிமோட்டோகிராபராக இருந்தார்.

பீஸ்ட் படம் கதை அளவில் மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் கூட சண்டை காட்சிகள் இன்னும் பல காட்சி அமைப்புகள் ஹாலிவுட்டிற்கு நிகராக இருந்ததாக பலரும் பேசி வந்தனர்.

இந்நிலையில் அந்த சினிமோட்டோகிராபர் லோகேஷ் கனகராஜூடன் இணைவது கண்டிப்பாக படத்தை இன்னும் மெருகேற்றும் என ரசிகர்கள் வட்டத்தில் கூறப்படுகிறது.