நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அதே சமயம் தொடர்ந்து தனது கனவுகளின் மீதும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் துணிவு திரைப்படத்திற்கு பிறகே தொடர்ந்து கார் ரேஸ் மீது ஆர்வம் காட்ட துவங்கினார் அஜித்.
இப்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு இன்னமும் அதிகமாக கார் ரேஸில் அவரது ஆர்வம் இருந்து வருகிறது. குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு அஜித் இனி தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா என்பது கூட சந்தேகமாக இருக்கிறது. அந்த அளவிற்கு கார் ரேஸில் அவரது ஆர்வம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே துபாய் கார் ரேஸில் அஜித் கலந்துக்கொண்டார். அதில் சோதனை ஓட்டத்தின்ப்போதே அவரது கார் விபத்துக்குள்ளானது. அதனை தொடர்ந்து அஜித் அந்த போட்டியில் கலந்துக்கொள்ளவில்லை. ஆனால் அவருடைய குழு அதில் கலந்துக்கொண்டு மூன்றாம் பரிசை வென்றது.
இந்த நிலையில் அதனை தொடர்ந்து அடுத்து போர்ச்சுக்கலில் நடந்த கார் ரேஸில் கலந்துக்கொண்டார் அஜித். அதிலும் தற்சமயம் அவர் விபத்துக்குள்ளாகி இருக்கிறார். ஆனால் அஜித்துக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
ஏன் அஜித் கார் தொடர்ந்து விபத்துக்குள்ளாகிறது என்கிற கேள்வி பலருக்கும் எழுந்து வருகிறது. இதுக்குறித்து சினி வட்டாரத்தினர் கூறும்போது வெகு வருடங்களுக்கு நடந்த விபத்துக்கு பிறகு அஜித் சுத்தமாக கார் ரேஸையே விட்டு விட்டார்.
அதனால்தான் அவரால் இப்போது கார் ஓட்ட முடியவில்லை. மீண்டும் அவர் பயிற்சி எடுக்கும் பட்சத்தில் சரியாக கார் ஓட்டுவார் என கூறி வருகின்றனர்.







