படப்பிடிப்பில் அந்த மாதிரி பண்ண கூடாது.. அனிகாவிற்கு தனுஷ் ரூல்ஸ் போட இதுதான் காரணம்!.
அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை அனிகா சுரேந்தர். அனிகா சிறு வயதிலிருந்து மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் அவருக்கு அறிமுக திரைப்படமாக என்னை அறிந்தால் திரைப்படம் அமைந்தது. அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து மீண்டும் விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்தார். இதனால் பலரும் அஜித்தின் உண்மையான மகள் அனிகா என்று நினைக்கத் தொடங்கினர்கள் ரசிகர்கள்.
அந்த அளவிற்கு அனிகாவிற்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் கிடைத்தது. பிறகு மலையாளத்தில் கதாநாயகியாக களமிறங்கினார். ஆனால் அது அவ்வளவாக அவருக்கு கை கொடுக்கவில்லை. மீண்டும் தமிழில் ஹிப்ஹாப் ஆதி நடித்த பிடி சார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா நடித்தார்.
அது அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து இப்பொழுது நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அனிகா நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் தனுஷ் இயக்கத்தில் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் அனிகாதான் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இது குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசும் பொழுது இந்த படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் கூறும் பொழுது தனுஷ் இயக்கத்தில் நான் நடிக்கும் பொழுது அவர் என்னிடம் எப்போதுமே நடிப்புக்கு தயாராகி வராதே என்று தான் கூறியிருக்கிறார். ஏனெனில் அவர் எப்படி நடித்து காட்டுகிறாரோ அதை தான் நான் செய்ய வேண்டும் என்பதுதான் எனக்கு விதிமுறையாக இருந்தது. அது படத்தில் எப்படி வந்திருக்கிறது என்று தெரியவில்லை படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்று கூறி இருக்கிறார் அனிகா.