சிம்பு போட்ட ரூல்ஸ்.. நான் எடுத்த கதை… காரி துப்பிட்டாங்க..!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படங்களில் பெரிதாக வரவேற்பை பெறாமல் போன திரைப்படம் ஈஸ்வரன். ஈஸ்வரன் திரைப்படம் ஒரு குடும்ப  பாணியிலான திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படத்தில் சிம்புக்கான காட்சிகளை வெறும் 26 நாட்களில் படமாக்கி இருக்கிறார் சுசீந்திரன். இயக்குனர் சுசீந்திரன் சமீபத்தில் இது குறித்த சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் சுசீந்திரன் கூறும் பொழுது இந்த கதையை நான் ஜெய்யை கதாநாயகனாக வைத்து தான் எழுதினேன்.

படத்தில் கதாநாயகனுக்கான கமர்சியல் காட்சிகள் என்று பெரிதாக எதுவும் இருக்காது. சாதாரண ஒரு குடும்ப கதையாக அதை எடுப்பதுதான் எனது திட்டமாக இருந்தது.

Social Media Bar

ஆனால் சிம்பு என்னிடம் பேசும்பொழுது நீங்கள்தான் குறைந்த நாட்களிலேயே திரைப்படம் எடுத்து விடுகிறீர்களே மாநாடு திரைப்படத்தில் நான் நடிப்பதற்கு இடையே 26 நாட்கள் சும்மா தான் இருப்பேன்.

என்னை வைத்து ஒரு படம் பண்ணுங்கள் என்று கேட்டுக்கொண்டார். நானும் அந்த கதையை கொஞ்சமாக மாற்றி சிம்புவுக்கு ஏற்ற மாதிரி செய்தேன் படத்திற்காக சிம்பு 80 நாள் எனக்கு கால் சீட் கொடுத்திருந்தால் அதற்கு தகுந்த மாதிரி ஒரு கதையை செய்திருப்பேன்.

ஆனால் மக்கள் அந்த படத்தை விரும்பவில்லை காரி துப்பி விட்டார்கள் என்று அந்த படம் குறித்து கூறியிருக்கிறார் சுசீந்திரன்.