நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று அறிமுகமானவர்.
ஆனால் அவருடைய அதிகமான உயரம் காரணமாக அவருக்கு வில்லன் கதாபாத்திரம் அதிகமாக பொருந்தியது. அதனை தொடர்ந்து அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க தொடங்கின.
இந்த நிலையில் எஜமான் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் நடிகர் நெப்போலியன். ஆனால் நடிகர் நெப்போலியன் வில்லனாக நடித்த நடிப்பு அவ்வளவாக ரஜினிகாந்துக்கு அப்பொழுது பிடிக்கவில்லை.
அதற்கு பிறகு படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்த பிறகு படத்தை போட்டு பார்த்த பொழுது நெப்போலியன் கதாபாத்திரம் சிறப்பாக இருப்பதை பார்த்தார் ரஜினிகாந்த்.
பிறகு நெப்போலியனை அழைத்து இதற்காக பாராட்டியுள்ளார் இந்த விஷயத்தை நெப்போலியன் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.







