விஜய் கட்சியில் இந்த பதவி கேப்பேன்.. சத்யராஜின் அதிரடி முடிவு..!
நடிகர் சத்யராஜ் சமீபத்தில் த.வெ.க கட்சி குறித்து பேசிய விஷயம் அதிக சர்ச்சையாகி வருகிறது. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் சரத்குமார் போன்ற நடிகர்கள் பிரபலமாக இருந்த அதே காலகட்டத்தில் அவர்களுக்கு போட்டி நடிகர் சத்யராஜ்.
ஒரு வருடத்தில் எட்டுக்கும் அதிகமான திரைப்படங்களில் சத்யராஜ் நடித்திருக்கிறார். அந்த அளவிற்கு சத்யராஜ்க்கு மிகப்பெரிய மார்க்கெட் இருந்தது.
ஆனாலும் புது நடிகர்களின் வருகைக்கு பிறகு சத்யராஜ் மார்க்கெட் குறைய தொடங்கியது. தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. நடித்த படங்களும் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தது.
அதனை தொடர்ந்து இப்பொழுது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கும் தனக்கு நல்ல சம்பளம் கிடைப்பதாக சத்யராஜ் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேர்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தால் எந்த பதவியில் சேர்வீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சத்யராஜ் கண்டிப்பாக நான் பெரியார் தொடர்பான ஒரு பதவியை தான் எடுப்பேன்.
பெரியாரின் கருத்துக்களை பரப்பும் ஒரு கொள்கை பரப்பு செயலாளர் பதவி எனக்கு கிடைத்தால் அதை நான் எடுத்துக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார் சத்யராஜ். இதன் மூலம் சத்யராஜ் தமிழக வெற்றி கழகத்தில் சேருவதற்கு ஆர்வம் காட்டுகிறாரா என்று கேள்விகள் எழுந்துள்ளன.