நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் வீரதீர சூரன் பாகம் 2. பொதுவாக திரைப்படங்களைப் பொறுத்தவரை முதல் பாகம் வெளியான பிறகுதான் இரண்டாம் பாகம் எடுக்கப்படும்.
ஆனால் வீர தீர சூரன் திரைப்படத்தை பொறுத்தவரை இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு விட்டு பிறகு அதன் முன் கதையை முதல் பாகமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் வீர தீர சூரன் திரைப்படத்தின் டீசரே அதிக வரவேற்பு ஏற்படுத்தும் வகையில் இருந்தது. முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைக்கதையைக் கொண்ட இந்த படம் விக்ரமிற்கு வெகு காலத்திற்கு பிறகு வந்திருக்கும் ஒரு ஆக்சன் படம் என்று கூறலாம்.
சமீப காலங்களாக விக்ரம் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய வரவேற்பு பெறவில்லை. ஆனால் நடிப்பை பொறுத்தவரை ஒவ்வொரு திரைப்படத்திலும் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து வருகிறார் விக்ரம்.
இந்த நிலையில் வீர தீர சூரன் திரைப்படம் வரவேற்பை பெற்றுக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு தகுந்தார் போல அதன் ட்ரைலர் நேற்று வெளியானது. கிட்டத்தட்ட கைதி திரைப்படத்தை போலவே இந்த படத்தின் கதை அம்சமும் இருப்பதை பார்க்க முடிகிறது.
ஆரம்பத்தில் தவறுகள் செய்து வந்த விக்ரம் பிறகு நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் அவரை செய்த தவறுகள் சுற்றி வருகின்றன என்பதாக கதைக்களம் இருக்கிறது. இந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று இப்பொழுதே பேச்சுக்கள் இருந்து வருகின்றன.






