கூலி ரஜினி பண்ணக்கூடிய கதையே கிடையாது… லீக் செய்த லோகேஷ்.!

லோகேஷ் கனகராஜ் ரஜினி கூட்டணியில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கூலி. திடீரென்று முடிவு செய்யப்பட்டு உருவான ஒரு திரைப்படம் கூலி என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் வளர துவங்கிய பிறகு முக்கியமாக விக்ரம் மற்றும் மாஸ்டர் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு அவரும் ரஜினியும் இணைந்து ஒரு படம் உருவாக வேண்டும் என்பது தமிழ் ரசிகர்களின் ஆசையாக இருந்தது.

ஆனால் மாநகரம் திரைப்படம் முடித்த காலகட்டத்தில் இருந்து ரஜினி தனக்கு ஒரு கதை கூறுமாறு லோகேஷ் கனகராஜிடம் கேட்டிருக்கிறார். இந்த விஷயத்தை லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த நிலையில் இது குறித்து லோகேஷ் கூறும் பொழுது அனிருத்திடம் பாடல்கள் கேட்டு நான் சென்றிருந்தேன். அப்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த்.

lokesh kanagaraj
lokesh kanagaraj
Social Media Bar

அந்த சமயத்தில் நான் ஏற்கனவே அனிருத்திடம் ஒரு கதையை கூறியிருந்தேன். அனிருத் அந்த கதையை திரும்ப என்னிடம் கூறி அந்த கதையை பேசாமல் நீ ரஜினியை வைத்து படம் ஆக்கினால் என்ன என்று கேட்டார். அந்த கதை ரஜினி சாருக்கு ஒத்துவராக ஒரு கதை அவர் அதில் நடிப்பாரா? என்று எனக்கு சந்தேகமாக இருந்தது.

இருந்தாலும் அனிருத் பேசிப் பார்க்கலாம் என்று கூறியதால் ரஜினி சாரிடம் அனுமதி பெற்று மறுநாளே அவரை சந்தித்தோம். அது ரஜினி சாருக்கு ஆச்சரியமாக இருந்தது இவ்வளவு நாள் நான் கதை கேட்டும் வராத ஆள் திடீரென்று கதை கூற வந்திருக்கிறீர்களே?

அவ்வளவு சிறப்பான கதை அமைந்து விட்டதா என்று கேட்டார் பிறகு நானும் அந்த கதையை கூறினேன். அது அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது கண்டிப்பாக இந்த கதையை படமாக்கலாம் என்று கூறிவிட்டார். இப்படித்தான் கூலி திரைப்படத்திற்கு ரஜினி சாரிடம் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று கூறி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.