அஜித்தால் சன் பிக்சர்ஸ்க்கு வந்த நஷ்டம்… நிறுவனம் எடுத்த முடிவு..!

சமீப காலமாக நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்பது தமிழ் சினிமாவில் வரவேற்பு பெறாமல் இருந்து வருகிறது. குறிப்பாக விடாமுயற்சி திரைக்கு வந்து பெரும் வெற்றியை அடையவில்லை.

இது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனெனில் இவ்வளவு காலங்கள் அஜித் நடித்த திரைப்படங்கள் சுமாரான திரைப்படங்களாக இருந்தாலுமே நல்ல வெற்றியை பெற்று வந்தன.

ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தை பொருத்தவரை அஜித்துக்கான ஹீரோயிசம் விஷயங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் அந்த படம் தோல்வியை கண்டது.

Social Media Bar

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியது. ஆனால் ஓடிடியில் வெளியாகியும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

அதனால்தான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்து அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் வாங்க இருந்தது.

ஆனால் விடாமுயற்சி படத்தால் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக குட் பேட் அக்லி திரைப்படத்தை அவர்கள் வாங்கவில்லை. அதனால்தான் இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.