நேற்று ஏர் இந்தியா விமானத்தால் நடந்த விபத்து இந்தியாவையே உலுக்கியுள்ளது என்றுதான் கூற வேண்டும். லண்டனுக்கு செல்வதற்காக கிளம்பிய விமானம் குடியிருப்பு பகுதிகளில் இறங்கியது. இறங்கிய கணமே விமானம் வெடித்தது.
இதில் பயணித்த பலரில் ராஜஸ்தானை சேர்ந்த பிரதீக் ஜோஷி என்கிற தொழிலதிபரும் ஒருவர். இவர் ராஜஸ்தானில் முக்கிய தொழிதிபராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது மனைவி கோமி வ்யாஸ் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார் பிரதீக்
இதற்காக நேற்று குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்துள்ளார். இந்த நிலையில் விமான விபத்து ஏற்பட்ட காரணத்தால் அவரது மொத்த குடும்பமுமே பலியாகியுள்ளது. இந்த விபத்தால் நடந்த வேதனையான விஷயங்களில் இதுவும் ஒன்றாக மாறியுள்ளது.