சினிமாவெல்லாம் தண்ட செலவு – ஒரு காலத்தில் தந்தையிடம் சண்டையிட்ட ஏ.வி.எம் சரவணன்!

தமிழ்நாட்டில் சினிமாவை கண்டுப்பிடித்தது யார் என கேட்டால் அனைவரும் ஏ.வி மெய்யப்ப செட்டியார் என கூறுவார்கள். அந்த அளவிற்கு ஏ.வி.எம் செட்டியார் தமிழ் சினிமாவில் முக்கியமானவர்.

Social Media Bar

அவருக்கு பிறகு அவரது மகன் ஏ.வி.எம் சரவணன் அவர்கள் ஏ.வி.எம் நிறுவனத்தை நடத்தி வந்தார். ஏ.வி.எம் செட்டியாருக்கு பிறகு ஏ.வி.எம் சரவணனின் பங்கு தமிழ் சினிமாவில் மிக முக்கியமானது. தமிழ் சினிமாவில் வெகுகாலம் பணியாற்றியவர் ஏ.வி.எம் சரவணன். 

கமல்ஹாசன் சிறுவனாக முதல் படமான களத்தூர் கண்ணம்மாவில் நடிக்கும்போது அந்த படத்தின் தயாரிப்பு விஷயங்களை பார்த்துக்கொண்டவர் ஏ.வி.எம் சரவணன்.

திரைத்துறையில் பெரும் தொண்டு ஆற்றியவர் ஏ.வி.எம் சரவணன். தற்சமயம் திரைதுறையை விட்டு ஓய்வில் இருக்கிறார். ஆனால் சிறுவனாக இருந்தபோது ஏ.வி.எம் சரவணனுக்கு சினிமா துறையில் ஆர்வமே கிடையாதாம்.

நமது பையன் சினிமா பார்த்து அதை கற்றுக்கொள்ள வேண்டுமே என அவரது தந்தை சினிமாவிற்கு போக காசு கொடுத்து போய் சினிமா பார்க்க சொல்வாராம். ஆனால் ஏ.வி.எம் சரவணன் அந்த காசில் மிட்டாய் வாங்கி சாப்பிட்டு விடுவாராம்.

இதை கண்டுப்பிடித்து அவரது தந்தை கேட்கும்போது “சினிமாவுக்கு செலவு செய்றது வீண் செலவு” என கூறியுள்ளார் ஏ.வி.எம் சரவணன்.

பிறகு அப்படி கூறிய ஏ.வி.எம் சரவணனே சினிமாவிற்காக கோடி கணக்கில் செலவு செய்துள்ளார்