கே.ஜி.எஃப் மாதிரி கதை.. வெளியான விஜய் ஆண்டனி சக்தி திருமகன் ட்ரைலர்..!

நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ந்து தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

விஜய் ஆண்டனி திரைப்படம் என்றாலே வித்தியாசமான கதையை கொண்டிருக்கும் என்பது மக்களது எண்ணமாக இருக்கிறது. மேலும் விஜய் ஆண்டனி திரைப்படத்திற்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

நான் திரைப்படத்தில் துவங்கி விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் கோடியில் ஒருவன் மாதிரியான பல படங்கள் வித்தியாசமான சதை அமைப்பைக் கொண்டு இருந்துள்ளது.

கோடியில் ஒருவன் திரைப்படம் அரசியல் சார்ந்த ஒரு கதைக்களமாக இருந்தது. கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு கதை களத்தை கொண்டு சக்தி திருமகன் திரைப்படம் அமைந்து இருக்கிறது. இந்த திரைப்படத்தில் கே.ஜி.எஃப் திரைப்படத்தின் கதைக்களம் மாதிரியான சில தொடர்புகளை பார்க்க முடிகிறது.

கே.ஜி.எஃப் திரைப்படத்தில் சிறுவயதிலிருந்தே தங்கத்தோடு தொடர்புடைய ஒரு நபராக கதாநாயகன் இருப்பதை பார்க்க முடியும். அதே மாதிரி சக்தி திருமகன் திரைப்படத்தில் பிறந்தது முதலே அரசியலுக்கு எதிரான ஒரு நபராக உருவாகிறார் விஜய் ஆண்டனி.

இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது படம் முழுக்க முழுக்கவே அரசியல் சார்ந்த விஷயங்களை பேசும் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து இருக்கிறார் இது விஜய் ஆண்டனியின் 25வது திரைப்படம் ஆகும்.