இந்த பிரபலத்தின் கதைதான் இட்லிகடை படமா? ட்ரைலரை வைத்து கண்டுப்பிடித்த ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். அப்படியாக அடுத்து அவரது நடிப்பில் வர இருக்கும் திரைப்படம்தான் இட்லி கடை.

இந்த படத்தின் நித்யா மேனன், அருண் விஜய் இன்னும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதன்படி பார்க்கும்போது தனுஷ் இந்தியாவின் தலை சிறந்த செஃப் பாக இருக்கிறார்.

அவரது தாத்தா ஒரு சின்ன கிராமத்தில் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த இட்லி கடையை திரும்ப புணரமைப்பதற்காக தனுஷ் தன்னுடைய தொழிலை விட்டு விட்டு அங்கு வந்து இட்லி கடை துவங்குகிறார்.

இதற்கு நடுவே அவருக்கும் அருண் விஜய்க்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. தனது தாத்தா நடத்திய இட்லி கடையை எப்படி அவர் வெற்றிகரமாக நடத்துகிறார் என்பதாக கதை இருக்கலாம் என பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த படத்தின் கதைக்களம் கிட்டத்தட்ட பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜின் கதையோடு ஒத்து போவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. தந்தை நடத்தி வந்த சின்ன கேட்டரிங் சர்வீஸை கையில் எடுத்துதான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.

எனவே அவருடைய வாழ்க்கை கதையின் தழுவலாக கூட இட்லி கடை படம் இருக்கலாம் என நெட்டிசன்கள் ஒரு பக்கம் பேசி வருகின்றனர்.