யார் வேணா அதை செய்யலாம்.. விஜய் குறித்து பார்த்திபன் சொன்ன விஷயம்..

நடிகர் விஜய் தற்சமயம் அரசியல் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு விஜய் அடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்சமயம் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறார் விஜய். இந்த சுற்றுப்பயணத்துக்கும் எக்கச்சக்கமான வரவேற்புகள் என்பது இருந்து வருகிறது.

திரை துறையை பொருத்தவரை அதில் விஜய்க்கு ஆதரவாக பேசுபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. நடிகர் விமல், பார்த்திபன் மாதிரியான சிலர் விஜய்க்கு ஆதரவாக இருக்கின்றனர்.

Social Media Bar

ஆனால் தேர்தல் சமயத்தில் தான் சினிமாவில் இருந்து எத்தனை பேர் விஜய்க்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது தெரியும். இந்த நிலையில் சமீபத்தில் இட்லி கடை திரைப்படத்தின் விழாவில் பேசிய நடிகர் பார்த்திபன் விஜய்க்கு ஆதரவாக சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது அரசியலுக்குள் யார் வேண்டுமானாலும் விஜயம் செய்ய முடியும் ஆனால் ஜெயம் உங்க கையில்தான் இருக்கு என கூறியுள்ளார். அவர் இப்படி கூறியதுமே அங்கிருந்த ரசிகர்கள் த.வெ.க என்று சத்தம் போட துவங்கியிருக்கின்றனர்