பெரிய ஹீரோக்கிட்ட இதெல்லாம் பண்ண கூடாதுன்னு சொன்னாங்க… பா.ரஞ்சித்துக்கு நடந்த விஷயம்..!
சமூகம் சார்ந்த விஷயங்களை திரைப்படங்களின் வழியாக பேசும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பா ரஞ்சித்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படத்திலுமே முக்கியமான கருத்துக்கள் பேசப்பட்டு இருக்கும். இந்த நிலையில் அட்டகத்தி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதற்குப் பிறகு காலா, கபாலி என்று அவர் இயக்கிய படங்கள் எல்லாமே பெரிய நட்சத்திரம் படங்களாகதான் இருந்தன. இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில் அவர் கூறும் பொழுது இந்த மாதிரியான சமூக கருத்துக்களை பெரிய ஹீரோக்கள் திரைப்படங்களில் பேசக்கூடாது என்று என்னிடம் பலரும் கூறினார்கள்.

ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை நான் மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கும் பொழுது அந்த படத்தின் கரு என்ன என்பதை கார்த்திக் சாரிடம் சொல்லிவிட்டு தான் படப்பிடிப்பை துவங்கினேன்.
அவர் ஏற்கனவே பருத்திவீரன் படத்தில் நடித்திருப்பதால் ஒரு சமூகம் சார்ந்த விஷயம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது அவருக்கு புரிந்தது. எனவே அந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார்.
அதே மாதிரி கபாலி காலா திரைப்படங்களிலும் எனக்கு தேவைப்பட்ட கதை களத்திற்குள் நான் ரஜினி சாரை வைத்து அந்த படத்தை இயக்கினேன் என்று கூறியிருக்கிறார் பா ரஞ்சித்.