சிவகார்த்திகேயனுக்கும் ராஷ்மிகாவுக்கும் வந்த பிரச்சனை.. எஸ்.கேவுடன் மீண்டும் இணையும் புது நடிகை..!
நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தியாவில் மிகப் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். பாலிவுட் வரை அவருக்கான வாய்ப்புகள் என்பது அதிகமாக இருந்து வருகிறது.
எனவே தெலுங்கு சினிமாவை விடவும் இப்பொழுது பாலிவுட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ராஸ்மிகா. இவர் நேரடியாக தமிழில் நடித்த திரைப்படங்கள் என்றால் அது நடிகர் கார்த்தி உடன் சேர்ந்து நடித்த சுல்தான் மற்றும் நடிகர் விஜயுடன் சேர்ந்து நடித்த வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஆகும்.

வாய்ப்பை இழந்த ராஷ்மிகா:
அதற்குப் பிறகு தமிழில் நேரடியாக ராஸ்மிகா படங்களில் நடிக்கவில்லை தனுஷுடன் அவர் நடித்த குபேரா திரைப்படம் கூட நேரடியான தமிழ் படம் கிடையாது. இந்த நிலையில் ராஷ்மிகா சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் சிவகார்த்திகேயனுக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக ஒரு சில பேச்சுக்கள் இருக்கின்றன. அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார். இப்பொழுது அந்த படத்தில் வேறு நடிகையை நடிக்க வைப்பதற்கு பேச்சுக்கள் சென்று கொண்டு இருக்கிறதாம்.