வயதான பிறகும் கூட நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். வேட்டையன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அவரது நடிப்பில் கூலி திரைப்படம் வெளியானது.
அந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர் 2. ஜெய்லர் 2 திரைப்படம் முடித்த பிறகு ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் உருவாக இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தன.
ஆனால் அதில் இப்பொழுது ஒரு சின்ன மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அது முடிந்த பிறகுதான் அவர் ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
மேலும் இயக்குனர் சுந்தர் சியும் இப்பொழுது மூக்குத்தி அம்மன் பாகம் 2 திரைப்படத்தை இயக்கி வருவதால் அந்த படத்தை முடிந்த பிறகு தான் இந்த படத்தின் படப்பிடிப்புகளை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
அருணாச்சலம் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியும் சுந்தர் சி யும் இணையும் திரைப்படமாக இந்த திரைப்படம் இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.