பிக்பாஸ் தமிழ் 9வது சீசன் ஆரம்பம் பரபரப்பின்றி மெதுவாக சென்றாலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதலில் வாட்டர்மெலன் ஸ்டார், பார்வதி தவிர்த்து பெரிதாக யாரும் வெளியே தெரியாத நிலை மாறி தற்போது பலரும் நல்ல பெர்பார்மென்ஸ் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். முக்கியமாக கானா வினோத் தனி ரசிகர்கள் உருவாக்கும் அளவிற்கு டாக்ஸிக் இல்லாத விளையாட்டை விளையாடி வருகிறார்.
வாட்டர்மெலன் ஸ்டாருடன் சேர்ந்து காமெடி செய்வதோடு மட்டுமல்லாமல், வீட்டு விவகாரங்களில் தலையிட்டு தீர்வுக்காக பேசுவது, போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்பது என கவனம் ஈர்க்கிறார்.
நேற்று அடுத்த வார வீட்டு தல டாஸ்க் நடந்த நிலையில் அதில் கம்ருதீன், சபரிநாதன், கனி அக்கா மூன்று பேருடைய மாதிரி பொம்மைகள் வைக்கப்பட்டு கத்தியால் குத்த வேண்டும், ஆனால் அவர்கள் பார்த்து விடக் கூடாது என டாஸ்க் வைக்கப்பட்டது.
இதில் முதல் குத்து வாங்கியதுமே கம்ருதீன் டென்ஷன் ஆகி கோபமாக டாய்லெட் சென்றுவிட மற்றவர்களும் கத்தியால் குத்தி அவரை வீட்டு தல டாஸ்க்கில் எலிமினேட் செய்தனர். அந்த ஆத்திரம் தீராமல் அவர் கத்திக் கொண்டிருந்தபோதும், கனி அக்காவும், சபரியும் தங்களை யாரும் குத்திவிடக்கூடாது என கவனமாக இருந்தனர்.
எல்லாரும் சாப்பிட்டுவிட்டு வந்து கேமை தொடரலாம் என இருந்த நிலையில், கானா வினோத் கத்திகளை எடுத்து உடல் முழுவதும் மறைத்துக் கொண்டு களத்தில் இறங்கினார்.
தொடர்ந்து பொம்மை அருகே சென்று சென்று குத்தப்போவது போல பாசாங்கு செய்து கவனத்தை கலைத்துக் கொண்டே இருந்தவர், சபரி எதிர்பாராத நேரத்தில் கத்தியை எடுத்து சபரி பொம்மையில் குத்தி எலிமினேட் செய்தார். ஆனால் அதை வினோத்தை விட பார்வதி உற்சாகமாக கொண்டாடினார். இதனால் அடுத்த வார வீட்டு தலயாக கனி அக்கா தேர்வாகியுள்ளார்.
இதுவரை கிச்சனை விட்டே வெளியே வராமல் இருந்த கனி அக்காவை பிக்பாஸே கூப்பிட்டு கேம் விளையாட அறிவுறுத்திய நிலையில் விஸ்வரூபம் எடுத்த கனி அக்கா வீட்டு தலயாக மாறியுள்ளார். இந்நிலையில் வீட்டு தலயாக அடுத்த வாரம் அவர் என்னென்ன செய்யப்போகிறார்? முக்கியமாக எல்லாத்துக்கும் எடக்கு மடக்கு பேசும் பார்வதியை என்ன செய்வார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது