தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகி அதற்குப் பிறகு முக்கியமான ஒரு நடிகராக மாறியவர் நடிகர் பார்த்திபன்.
பார்த்திபனை பொறுத்தவரை கமர்சியல் திரைப்படங்களை விடவும் தொடர்ந்து வித்தியாசமான திரை கதைகளை தமிழ் சினிமாவிற்கு கொண்டுவர வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு இருந்தது.
அதனை தொடர்ந்து அவர் இயக்கிய நிறைய திரைப்படங்கள் வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்டு வெளியாகி வந்தன. இதனாலேயே தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்க்கும் ஒரு இயக்குனராக பார்த்திபன் இருந்து வந்தார்.
பார்த்திபன் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே நடிகை சீதாவை இவர் காதலித்து வந்தார். இதனை தொடர்ந்து சீதாவும் இவரும் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் அதற்குப் பிறகு பல வருடங்களுக்குப் பிறகு இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர்.
பார்த்திபன் சமீபத்தில் இதுக்குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார் அப்பொழுது அவர் கூறும் பொழுது விவாகரத்து பெறுவதற்கு 12 வருடங்களுக்கு முன்பே எங்கள் இருவருக்கும் ஒத்து வராது என தெரிந்து விட்டது.
இருந்தாலும் அப்படி ஒரு முடிவை உடனே எடுத்து விட வேண்டாம் என்று 12 வருடங்களுக்கு அந்த முடிவை தள்ளி போட்டோம். ஆரம்பத்தில் திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்த சீதா அதற்குப் பிறகு மீண்டும் நடிக்க வேண்டும் என்று நினைத்தார்.
அது எதனால் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை இப்பொழுது இருக்கும் மெச்சூரிட்டி அப்பொழுது எனக்கு இருந்திருந்தால் 12 வருடத்திற்கு அந்த முடிவை தள்ளி போட்டு இருக்க மாட்டேன். உடனே அவருக்கு விவாகரத்து கொடுத்திருப்பேன் என்று பார்த்திபன் கூறியிருக்கிறார்.








