தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் பைசன் திரைப்படமும் முக்கியமான திரைப்படம் ஆகும்.
இந்த முறை தீபாவளியை முன்னிட்டு பெரிய திரைப்படங்கள் என்று எதுவும் வரவில்லை. பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் மற்றும் துருவ் விக்ரம் நடித்த பைசன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தன.
பைசன் திரைப்படம் மாரி செல்வராஜ் திரைப்படம் என்பதாலேயே கவனத்தை ஈர்க்கும் திரைப்படமாக இருந்தது. அனுபாமா பரமேஸ்வரன் இதில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.
தொடர்ந்து சமூக பிரச்சனையை திரைப்படம் வழியாக பேசும் மாரி செல்வராஜ் இந்த படத்தில் கூட பல முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்திற்கு வரவேற்பும் அதிகமாக கிடைத்திருக்கிறது.
தற்சமயம் படம் வெளியாகி 14 நாட்கள் ஆன நிலையில் பைசன் திரைப்படம் 62 கோடி வசூல் செய்து இருக்கிறது. எப்படியும் இந்த திரைப்படம் 100 கோடி வரை வசூல் செய்யலாம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.
 
			 
			








