தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை தொடர்ந்து கொண்டு வர வேண்டும் என ஆசைப்பட்ட திரை பிரபலங்களில் மிக முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். தொடர்ந்து தமிழ் சினிமா ஒரே மாதிரி போய்க்கொண்டிருந்த சமயத்திலேயே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தவர் நடிகர் கமல்ஹாசன்
அப்படி அவர் ஆசைப்பட்டு அவரே தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம்தான் மருதநாயகம். கி.பி 1725 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் வாழ்ந்து வந்த மருதநாயகம் பிள்ளை. முகமது யூசப் கான் என தனது பெயரை மாற்றி கொண்ட மருதநாயகம் வரலாற்றில் செய்த விஷயங்களை அடிப்படையாக கொண்டதுதான் மருதநாயகம் திரைப்படம்.
கமல்ஹாசன் அதை மிகவும் பெரிய பட்ஜெட்டில் படமாக்கினார். அந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் படத்திற்கு செலவு செய்ய கமல்ஹாசனுக்கே வசதி போதவில்லை.
பிறகு பல்வேறு காரணங்களால் கமல்ஹாசனால் அந்த திரைப்படத்தை தொடர முடியவில்லை. அதற்கு பிறகு முக்கால்வாசி படம் எடுக்கப்பட்ட நிலையிலும் பாதியிலேயே நின்று போனது மருதநாயகம்.

இப்போது வரை கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் திரைப்படம் உருவாகவே இல்லை. ஆனால் இப்போது இருக்கும் இளம் இயக்குனர்கள் அந்த திரைப்படத்தை இயக்க ஆர்வமாக இருந்தால் கதையை தருவதாக கூறியுள்ளார் கமல்ஹாசன்.
இதற்கு நடுவே எடுத்த வரைக்குமாவது படத்தை வெளியிட்டால் தேவலாம் என்பது கமல் ரசிகர்களின் ஆவலாக இருக்கிறது.







