டிசியின் அடுத்தப்படம் – வெளியானது ஷசாம் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர்!

ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோக்கள் படத்தை பொறுத்தவரை மார்வெல், டிசி என்ற இரு நிறுவனங்களே போட்டி போட்டுக்கொண்டுள்ளன. சமீபத்தில் மார்வெல் சினிமாஸில் உருவான ஆண்ட் மேன் அண்ட் வாஸ்ப் குவாண்டம் மேனியா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

Social Media Bar

இந்த படம் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி வரவிருக்கிறது. இதை தொடர்ந்து டிசியின் திரைப்படமான ஷசாம் படத்தின் இரண்டாம் பாகமும் வரவிருக்கிறது. ஒரு 12 வயது சிறுவனுக்கு சூப்பர் பவர் கிடைப்பதை அடுத்து அவன் செய்யும் சாகசங்களை மையமாக கொண்ட திரைப்படம் ஷசாம்.

ஷசாம் படத்தின் முதல் பாகத்தை இயக்கிய டேவிட் எஃப் சான்பெர்க்தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகமானது ஷசாம் என்னும் கதாபாத்திரத்திற்கு ஒரு ஆரம்பமாக மட்டுமே இருந்தது.

ஆனால் தற்சமயம் வரவிருக்கும் படத்தில் பல சாகசங்களை செய்யவிருக்கிறார் ஷசாம். ஷசாம் படத்தின் இரண்டாம் பாகமான ஷசாம் ஃபியுரி ஆஃப் காட் திரைப்படத்தின் ட்ரைலர் தற்சமயம் வெளியானது. வருகிற மார்ச் 17 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது.

ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்