பாஸ்ட் அண்ட் ப்யூரியஸின் இறுதி பாகம் இதுதான்! – ரிலீஸ் தேதியை வெளியிட்ட கதாநாயகன்!
தமிழில் பிரபலமாக உள்ள ஹாலிவுட் படங்களில் ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸும் ஒரு திரைப்படமாகும். இந்தியா முழுவதுமே ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்திற்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றனர்.

2001 ஆம் ஆண்டு ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் திரைப்படத்தின் முதல் பாகம் வந்தது. அதை தொடர்ந்து வரிசையாக ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் திரைப்படங்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதில் முதல் இரண்டு பாகத்தின் கதையை கேரி ஸ்காட் என்பவர் எழுதினார். அதன் பிறகு உள்ள 8 ஆம் பாகம் வரையிலான கதையை க்ரிஸ் மோர்கன் என்பவர் எழுதினார்.
இவர் எழுத துவங்கிய பிறகுதான் ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸின் கதை சூடுப்பிடிக்க துவங்கியது. கார் ஓட்டுவதில் மாஸ்டர் லெவலில் இருக்கும் ஒரு குழுவை வைத்து ஹரி படங்களையும் மிஞ்சிய கார் ஸ்டெண்டுகளை கொண்ட திரைப்படம்தான் ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் எனலாம்.

இந்த படத்தின் 10 ஆம் பாகம் இந்த வருடம் வரவிருக்கிறது. இதுதான் ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸின் இறுதி பாகம் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் மே மாதம் வெளியாகும் என கூறி அதன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் படத்தின் கதாநாயகனான விண்டீசல்.
படத்தின் ட்ரைலர் வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்