இனிமே இவனுக்கு மியூசிக்கே போடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்!.. வாலியை சாந்தப்படுத்த பாக்கியராஜ் செய்த ட்ரிக்…
தமிழ் சினிமாவில் பன்முக திறன் கொண்ட நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த பாக்யராஜ் தொடர்ந்து தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார்.
இவர் தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் அதிலும் அவரே கதாநாயகனாக நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் அவருக்கான வரவேற்பை அதிகமாக்கியது.
அதனை தொடர்ந்து அவர் நடித்த முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் போன்ற திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கின. இந்த நிலையில் இசையின் மீதும் ஆர்வம் காட்டி வந்தார் பாக்கியராஜ். அடுத்து அவர் இயக்கிய திரைப்படங்களுக்கு அவரே இசையமைக்க நினைத்தார்.
இதற்காக இரவு பகலாக உட்கார்ந்து ஆர்மானியத்தை வைத்து இசையமைக்க கத்துக் கொண்டிருந்தார் பாக்யராஜ். இது குறித்து வாலி ஒரு பேட்டியில் கூறும் பொழுது கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேலாக இரவு கூட தூங்காமல் தினமும் உக்காந்து ஆர்மானியத்தை வைத்து பயிற்சி எடுத்து வந்தார் பாக்யராஜ்.
பாக்கியராஜ் இசையமைத்த பாடல்களுக்கு நான்தான் பாடல் வரிகளை எழுதினேன். ஒரு பாடலுக்கான பல்லவியை நான் கூறிய பிறகு அதற்கே ஒரு நாள் எடுத்துக் கொண்டு இசையமைப்பார் பாக்யராஜ். இதனால் பெரும் கோபமடைந்த நான் இனி பாக்யராஜின் திரைப்படங்களுக்கு இசையமைக்க கூடாது என முடிவு செய்தேன்.
ஆனால் மறுநாளே ஐயாயிரம் ரூபாயை கவரில் வைத்து என்னிடம் கொடுத்தார் பாக்யராஜ். இப்படி பணம் கொடுப்பவரிடம் பிறகு எப்படி பாடல் வரிகள் எழுதி தராமல் இருக்க முடியும். எனவே மீண்டும் மீண்டும் அவரது திரைப்படங்களில் கமிட்டாகி கிட்டத்தட்ட 6 பாக்கியராஜ் படங்களுக்கு நான் தான் பாடல் வரிகளை எழுதினேன் என கூறியுள்ளார் வாலி.