இன்னொரு ரீடேக் போயிக்கலாம்!.. லியோ படத்தில் லோகேஷால் கஷ்டப்பட்ட விஜய்!..

தமிழில் உள்ள முக்கியமான நடிகர்கள் பட்டியலில் நடிகர் விஜய்க்கு கண்டிப்பாக ஒரு சிறப்பான இடம் இருக்கும். தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். அதிலும் தற்சமயம் அவர் நடித்து வரும் திரைப்படங்கள் யாவும் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன.

வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. லியோ படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவி வருகிறது. ஏனெனில் இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்கள் யாவும் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன.

அதிலும் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் பலகோடி ரூபாய் வசூலை குவித்தது. எனவே இவற்றையெல்லாம் தாண்டி விஜய் நடிக்கும் லியோ வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார் நடிகர் மன்சூர் அலிக்கான்.

இதுக்குறித்து அவர் கூறும்போது ஏற்கனவே மின்சார கண்ணா திரைப்படத்தில் நான் விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ளேன். அந்த படத்தில் நிறைய காட்சிகள் சரியாக வரவில்லை என பல காட்சிகள் ரீ டேக்கில் நடித்தார் விஜய்.

அப்போது பெரிய கதாநாயகனாக இல்லை என்பதால் எளிதாக விஜய்யிடம் ரீ டேக் வாங்க முடிந்தது. ஆனால் தற்சமயம் தமிழ் சினிமாவில் அவர் வளர்ந்த பெரும் கதாநாயகன் ஆகிவிட்ட போதிலும் லியோ படத்தில் ஒரு காட்சிக்கு பல ரீடேக் எடுத்துள்ளார்.

லோகேஷே அவரிடம் வேலைவாங்க பயப்பட்ட போதும் விஜய் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நடித்து கொடுத்துள்ளார் என விஜய் குறித்து கூறியுள்ளார் நடிகர் மன்சூர் அலிக்கான்.