க்ளைமேக்ஸ் அந்த அளவுக்கு இல்ல!.. சந்திரமுகி 2 டிவிட்டர் விமர்சனம்..
2005 ஆம் ஆண்டு வெளியாகி ஒரு வருடம் ஓடி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. சந்திரமுகி திரைப்படத்தின் தொடர்ச்சியாக சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற வெகு நாட்களாக இயக்குனர் பி வாசு ஆசைப்பட்டு வந்தார்.
அதனை தொடர்ந்து தற்சமயம் சந்திரமுகியின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார் சந்திரமுகியாக கங்கனா ராணாவத் நடித்துள்ளார். சந்திரமுகி முதல் பாகத்தின் முன் கதையான வேட்டையன் ராஜாவின் கதை தான் சந்திரமுகி 2 கதையாகும்.

ஆனால் வேட்டையன் ராஜாவாக ரஜினிகாந்த் நடித்ததை விட சிறப்பாக லாரன்ஸ் நடித்து விடுவாரா? என்கிற கேள்வியும் இருந்து வந்தது இந்த நிலையில் இன்று சந்திரமுகி 2 வெளியான நிலையில் இரண்டு வகையான விமர்சனங்களையும் இந்த படம் பெற்று வருகிறது. சிலர் கூறும் பொழுது படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் முதல் பாகம் அளவிற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் படத்தில் கங்கனா ரணாவத்திற்கு அதிக வரவேற்பு நிலவியுள்ளது. அவரை பாராட்டி பலரும் ட்வீட் செய்து வருகின்றனர் கீரவாணியின் இசை படத்தில் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்று கூறப்படுகிறது இரண்டாம் பாதிதான் படத்தில் கொஞ்சம் சிறப்பாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.