Connect with us

படப்பிடிப்பில் தரமான கவுண்டர் அடித்த கவுண்டமணி!.. படப்பிடிப்பே நின்னு போச்சு.. என்னப்பா இப்படி பண்ணீட்டிங்க…

sathyaraj gaundamani

Cinema History

படப்பிடிப்பில் தரமான கவுண்டர் அடித்த கவுண்டமணி!.. படப்பிடிப்பே நின்னு போச்சு.. என்னப்பா இப்படி பண்ணீட்டிங்க…

Social Media Bar

நகைச்சுவை நடிகர்களில் பல ஹீரோக்களோடு காம்போ போட்டு நல்ல காமெடிகளை கொடுத்தவர் நடிகர் கவுண்டமணி. ஆரம்பத்தில் தனியாக காமெடி செய்பவராகதான் கவுண்டமணி சினிமாவிற்கு வந்தார்.

ஆனால் சினிமாவிற்கு வந்த பிறகு அவருக்கு ஒரு நல்ல காம்போவாக நடிகர் செந்தில் இருந்தார். கவுண்டமணி செந்தில் கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்தனர்.

அதன் பிறகு இடையில் செந்திலுக்கும் கவுண்டமணிக்கும் இடையே சிறிய மோதல் காரணமாக பிளவு ஏற்பட்டது. இந்த சமயத்தில்தான் கதாநாயகர்களோடு சேர்ந்து நகைச்சுவை செய்ய துவங்கினார் கவுண்டமணி. இதில் வெற்றி காம்போவாக அமைந்தது சத்யராஜ், கவுண்டமணி காம்போதான்.

படப்பிடிப்பில் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல கவுண்டர் அடிப்பவர் கவுண்டமணி. அதனால்தான் அவருக்கு கவுண்டர் மணி என்கிற பெயரே வந்தது. தாய்மாமன் என்கிற திரைப்படத்தில் கவுண்டமணியும் சத்யராஜும் சேர்ந்து நடித்தனர்.

இந்த படத்தில் சத்யராஜ்க்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். அதில் ஒரு காட்சியில் சத்யராஜும் கவுண்டமணியும் அமைதியாக நிற்க வேண்டும். மீனா வந்து அவர்களை திட்ட வேண்டும் இவ்வாறு காட்சி இருந்தது. ஆனால் மீனா வந்ததுமே சத்யராஜ் சும்மா இல்லாமல் மாமா மாமா எனக்கு அந்த பொண்ணு வேணும் என கவுண்டமணியிடம் கேட்பார்.

அதற்கு கவுண்டமணி அவங்க அப்பன்கிட்ட கேளு என கூறுவார். இது டயலாக்கிலேயே இல்லை என்பதால் மீனாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது. திரும்ப திரும்ப அந்த காட்சியை எடுக்கும்போதும் மீனா சிரித்தவாறே இருந்துள்ளார். இதை சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

To Top