Connect with us

மூணு நாள் முயற்சி பண்ணியும் லியோல அந்த டான்ஸை வரவைக்க முடியலை!.. வெளிப்படையாக கூறிய மாஸ்டர்!..

leo new poster

News

மூணு நாள் முயற்சி பண்ணியும் லியோல அந்த டான்ஸை வரவைக்க முடியலை!.. வெளிப்படையாக கூறிய மாஸ்டர்!..

Social Media Bar

Leo, Lokesh kanagaraj: தமிழ் சினிமாவில் நடனத்தைப் பொறுத்தவரை நடிகர்களில் சிறப்பாக நடனமாக கூடியவராக நடிகர் விஜய் இருக்கிறார். பிரபுதேவாவும், லாரன்ஸும் கூட சிறப்பாக ஆட கூடியவர்தான் என்றாலும் அவர்கள் நடிகர்களாக திரைக்கு வந்தவர்கள் கிடையாது.

அவர்கள் ஏற்கனவே நடன கலைஞர்களாக இருந்தவர்கள். ஆனால் விஜய் நடன கலைஞராக இல்லாமல் நடிகராக வந்து சிறப்பாக நடனத்தை கற்றுக் கொண்டவர். எந்த ஒரு நடனத்தையும் ஒருமுறை சொல்லிக் கொடுத்தாலே உடனே அதை கற்றுக்கொண்டு ஆடுவார் விஜய் என்கிற பேச்சு தமிழ் சினிமாவில் உண்டு.

இதனாலேயே பெரிய பெரிய நடன கலைஞர்கள் கூட விஜயுடன் சேர்ந்து வேலை செய்ய ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில் தற்சமயம் வந்த லியோ திரைப்படத்தில் நான் ரெடி தான் வரவா பாடலுக்கு சிறப்பாக நடமாடியிருக்கிறார் விஜய்.

அவருடன் சேர்ந்து ஆடுபவர்கள் அவருக்கு நிகராக ஆடுவது கடினம் என்கிற நிலையில் சிறப்பாக இருந்தது அவனது நடனம். இந்த படத்திற்கு நடன கலைஞராக வேலை பார்த்தவர் அன்பறிவு .இது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறும்பொழுது எனக்கு பிடித்த ஒரு நடன காட்சியை மூன்று நாட்கள் முயன்றும் எடுக்க முடியவில்லை.

அதாவது மன்சூர் அலிகானும் விஜய்யும் இணைந்து ஆடுவது போல ஒரு காட்சியை படமாக்க நினைத்தேன். ஆனால் விஜய் அளவுக்கு மன்சூர் அலிக்கானால் ஆட முடியவில்லை. எனவே மூன்று நாள் முயன்றும் அது முடியாததால் பிறகு அவரை பின்னால் ஆட வைத்து விட்டோம் என்று கூறி இருந்தார் அன்பறிவு. ஒரு வேலை விஜய்யும் மன்சூர் அலிக்கானும் சேர்ந்து ஆடி இருந்தால் அது வேற லெவலில் இருந்து இருக்கும் என்று இது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

To Top