News
ரஜினிகாந்த் பிடித்திருக்கும் இந்த பையன் இப்போ 3000 கோடிக்கு அதிபதி!.. அருணாச்சலம் கணக்கா இருக்கே..
தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய அளவிலும் மிகவும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இவர் இருந்து வருகிறார்.
இருந்தாலும் கூட ரஜினிகாந்த் நடிப்பில் பெரிதாக பேன் இந்தியா திரைப்படங்கள் ஏன் இனமும் வெளியாகவில்லை என்பது ஒரு நெருடலான விஷயமாகதான் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் ஒரு சிறுவனை கட்டி அணைத்திருக்கும் புகைப்படம் ஒன்று ட்ரெண்ட் ஆகி வருகிறது அந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது வேறு யாருமில்லை நடிகர் ஹிரித்திக் ரோஷன் தான் என்று கூறப்படுகிறது.
ஹிந்தியில் வாய்ப்பு:
ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி இருவரும் இணைந்து ஹிந்தியில் நடித்த திரைப்படம் பகவான் தாதா. அந்த காலகட்டத்தில் ஹிந்தியில் வரவேற்பை பெற்ற நடிகராக ரஜினிகாந்த் இருந்தார்.
அதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் ரஜினிகாந்த் ஹிந்தியில் நடித்திருக்கிறார். அமிதாப்பச்சன் உடன் இணைந்தும் ஒரு திரைப்படத்தில் நடைபெறுகிறார்.

இந்த நிலையில் பகவான் தாதா திரைப்படத்தில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சிறு வயது கதாபாத்திரம் ஒன்று படத்திற்கு தேவைப்பட்டது. அந்த சமயத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஹிரித்திக் ரோஷன் ஆவலாக இருந்திருக்கிறார்.
குட்டி ரசிகர்:
அதற்கு என்ன காரணம் என்றால் சிறு வயது முதலே ரஜினிகாந்தின் திரைப்படங்களை பார்த்து அவரது பெரிய ரசிகனாக ஹிரித்திக் ரோஷன் இருந்திருக்கிறார். இந்த நிலையில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று சிறு வயதிலேயே ரஜினியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

தற்சமயம் பாலிவுட் சினிமாவில் அதிக சொத்துக்களை கொண்ட ஒரு நடிகராக ஹிருத்திக் ரோஷன் இருக்கிறார் இவருடைய மொத்த சொத்து மதிப்பு 3000 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. கிட்டதட்ட இது ரஜினிகாந்தின் சொத்து மதிப்பை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது.
