பிக்பாஸ்: புள்ள பூச்சிக்கு கொடுக்கு முளைக்கும்னு கனவா கண்டேன்!.. புது போட்டியாளர்களிடம் சிக்கிய பழைய போட்டியாளர்கள்!..
Big boss tamil: இந்த முறை பிக் பாஸ் துவங்கிய நாள் முதலே மிகவும் விறுவிறுப்புடன் சென்று கொண்டுள்ளது. அந்த விறுவிறுப்பை இன்னும் அதிகப்படுத்துவதற்காக புதிதாக 5 போட்டியாளர்களை உள்ளே இறக்கி உள்ளனர்.
இதற்கு முன்பு நடந்த எந்த பிக்பாஸிலும் இப்படி வைல்ட் கார்ட் ரவுண்டில் 5 பேரை உள்ளே கொண்டு வந்தது கிடையாது. பிரபல பாடகர் கானா பாலா உட்பட ஐந்து நபர்கள் இதில் உள்ளனர்.
பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் உள்ளே வந்த உடனே இந்த ஐந்து நபர்களை டார்கெட் செய்ய துவங்கினர். அவர்களை வேண்டும் என்றே ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பியது மட்டுமல்லாமல் அடுத்த வார நாமினேஷனுக்கும் அவர்களை தேர்வு செய்து இருக்கின்றனர் பழைய போட்டியாளர்கள்.
இந்த நிலையில் இன்று அவர்களுக்கு ஒரு புதிய போட்டி வைக்கப்பட்டது அதன்படி பிக் பாஸ் வீட்டில் பழைய போட்டியாளர்கள் டான்ஸ் ஆட வேண்டும். அதற்கு புதிய போட்டியாளர்கள் ஜட்ஜ் ஆக இருப்பார்கள் என்று கூறப்பட்டது இதனை அடுத்து வந்த நாள் முதல் பழைய போட்டியாளர்கள் செய்த விஷயங்களுக்கு பலி வாங்க முடிவு செய்துள்ளனர் புதிய போட்டியாளர்கள்.