News
விஜய் அஜித் எல்லாம் என்ன நடிக்கிறாங்க! பிரதீப் ரங்கநாதன்தான் பெரிய ஸ்டார்! – டிஸ்ட்ரிபூட்டர் வெளியிட்ட தகவல்?
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

லவ் டுடே திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அவரை வைத்து மற்றொரு திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது. அதேபோல லைக்கா நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது.
லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் நல்ல வெற்றியை கொடுத்த ஒரு திரைப்படம். இந்தத் திரைப்படத்தை குறித்து விநியோகஸ்தர் ஒருவர் பேட்டியில் கூறும்போது பெரிய பெரிய கதாநாயகர்களின் படங்களை காட்டிலும் பிரதீப் ரங்கநாதன் போன்ற சின்ன இயக்குனர்கள் கதாநாயகர்களின் திரைப்படங்கள் அதிக வெற்றியை கொடுக்கின்றன.
எனவே விஜய் அஜித் போன்ற பெரிய நடிகர்களை காட்டிலும் இவர்கள்தான் பெரிய சூப்பர் ஸ்டார் என கூற வேண்டும். பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படத்தின் தயாரிப்பு செலவு மொத்தம் ஆறு கோடி மட்டுமே ஆனால் அந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 80 கோடி வசூல் சாதனை செய்தது.
ஆனால் பெரும் ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்கள் 200 கோடி, ரூ 300 கோடி செலவு செய்து 500 கோடி வசூல் தருகின்றன. அதாவது படத்தை எடுக்க ஆகும் செலவைவிட ஒரு பங்கு அதிகமாக லாபம் கிடைக்கிறது. சில படங்கள் ஓடாமல் போகும்போது அந்த லாபமும் கிடைக்காமல் போகிறது.
ஆனால் லவ் டுடே எல்கேஜி போன்ற திரைப்படங்கள் படத்தின் தயாரிப்பு செலவை விட 10 மடங்கு அதிக லாபத்தை ஈட்டி தந்துள்ளன. எனவே உண்மையில் இவர்கள்தான் சிறந்த கதாநாயகர்கள் என அந்த விநியோகஸ்தர் கூறியிருந்தார்.
