Cinema History
யோவ் என்னையா படம் எடுத்து வச்சிருக்க.. டீக்கடையில் பாக்கியராஜை லாக் செய்த இளைஞர்!.. பாக்கியராஜ் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்!.
Bhagyaraj : தமிழில் உள்ள திரை இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு எல்லாம் அதிக வரவேற்பு இருந்தது. பிறகு அவர் கதாநாயகன் ஆனப் பிறகு அவருக்கான வரவேற்பு இன்னமும் அதிகரித்தது.
இந்த நிலையில் பாக்கியராஜை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்கு இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தனர். ஆனால் இயக்குனராக பாக்கியராஜ் அவரே இயக்கி நடித்த திரைப்படத்தில்தான் அதிக வரவேற்புகளை பெற்றார்.
சினிமாவில் அவர் முதன் முதலாக படம் எடுத்தப்போது முதல் படமே சோக படமாக சுவரில்லா சித்திரங்கள் என்னும் அந்த படத்தில் பாக்கியராஜே இயக்கி நடித்திருந்தார். நடிகர் சுதாகர் கதாநாயகனாக நடித்திருந்தார். படம் ஆரம்பத்தில் நன்றாக துவங்கி இறுதியில் மோசமாக முடிவடைந்துவிடும்.
இந்த நிலையில் சுவரில்லாத சித்திரங்கள் (suvarillatha sithirangal) படம் எடுத்து வெளியான பிறகு ஆந்திராவில் ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தார் பாக்கியராஜ். அப்போதுதான் அவர் ஒரு சில படங்கள் மூலமாக அறிமுகமாகி இருப்பதால் பெரும்பாலும் அங்கு இருப்பவர்களுக்கு அவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று பாக்கியராஜ் கருதினார்.
இந்த நிலையில் அவரை பார்த்து முறைத்து கொண்டிருந்த நபர் ஒருவர் நீதானே பாக்கியராஜ் என கேட்டுள்ளார். ஆமாம் நாந்தான் என பாக்கியராஜ் கூற, யோவ் என்னையா படம் எடுத்து வச்சிருக்க. முதல் பாதி அருமையா இருந்தது. இரண்டாம் பாதியில் சாவுக்கு மேல் சாவு என எலவை கூட்டி படத்தை நாசம் பண்ணிட்டியேயா என கோபமாக கூறியுள்ளார்.
அப்போதுதான் சோக க்ளைமேக்ஸாக இருந்தாலும் அதை இவ்வளவு வக்கிரமாக கூறினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என புரிந்துக்கொண்டார் பாக்கியராஜ். அதன் பிறகு அவர் எடுத்த எந்த படத்திலும் அந்த தவறை அவர் செய்யவே இல்லை.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்