Connect with us

மோசமான குடி பழக்கம்!.. அடுத்த சாவித்திரி ஆக போறாரா ஓவியா.. விவரத்தை கூறும் பிரபலம்

oviya savithri

News

மோசமான குடி பழக்கம்!.. அடுத்த சாவித்திரி ஆக போறாரா ஓவியா.. விவரத்தை கூறும் பிரபலம்

Social Media Bar

Oviya: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஓவியா. ஆனால் இவரின் உண்மையான பெயர் ஹெலன் நெல்சன். இவர் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படம் 2010 இல் வெளியிடப்பட்டு ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் களவாணி படத்தில் ஓவியாவின் நடிப்பு பலராலும் பேசப்பட்டது.

ஓவியா

கேரளாவை பூர்விமாகக் கொண்ட ஓவியா, திருச்சூரில் பிறந்தார். தமிழில் களவாணி தான் இவருக்கு முதல் படம். ஆனால் மலையாளத்தில் கங்காரு என்ற படத்தில் முதன் முதலில் தன்னுடைய திரைபயணத்தை தொடங்கினார்.

அதன் பிறகு தமிழில் மெரினா, மூடர்கூடம், யாமிருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்தார். மேலும் பல தமிழ் படங்களில் நடித்த ஓவியாவிற்கு அவ்வளவாக மார்க்கெட் இல்லாமல் சென்று விட்டது.

விஜய் டிவியில் முதன்முதலாக பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா கலந்து கொண்டார். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி பெரும் வெற்றி அடைவதற்கு முக்கிய காரணமாக ஓவியா இருந்தார். அப்பொழுது அவரின் குறும்புக்கார தனத்திற்கும், சேட்டைகளுக்கும் தனியாக ஆர்மி ஒன்றே ஆரம்பித்தார்கள் அவரின் ரசிகர்கள். அதன் பிறகு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறி அவர் பிக் பாஸை விட்டு வெளியேறி விட்டார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு பெரும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது அவர் மது அருந்தியபடி வெளியிட்டிருக்கும் புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

ஓவியா இதுபோன்று செய்திருப்பது பற்றி செய்யாறு பாலு கருத்து தெரிவித்தது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

கையில் சரக்குடன் ஓவியா

தற்பொழுது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஓவியா கையில் சரக்குடன் குடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, அவர் விரக்தியில் பேசுவது அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகை ஓவியா சமீபத்தில் நடித்து வெளியான படம் “90 எம்எல்” இந்த படத்தில் அவர் நடித்த போது தைரியமாக மது அருந்தியும், புகை பிடித்தும் நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் அவர் நடித்ததற்காக பலரும் பல விமர்சனங்களை தெரிவித்து வந்தார்கள். ஆனால் இதனை பற்றி எல்லாம் அவர் கவலைப்படாமல் அவர் செய்வதை செய்து கொண்டு வந்தார்.

oviya

இந்நிலையில் அவர் கையில் சரக்குடன் ஒரு போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் Drinking is injurious to health என கேப்சனும் கொடுத்திருக்கிறார். இதனைப் பற்றி செய்யாறு பாலு பேசும்பொழுது நடிகை சாவித்திரியின் குடிப்பழக்கமும் இது போன்று தான் ஆரம்பித்தது. அப்பொழுது பத்திரிக்கை ஒன்று இரண்டு பக்கத்துக்கு அவரின் குடிப்பழக்கத்தை பற்றி எழுதியது இந்த பதிவை நீக்குவதற்கு எம்.ஜி.ஆர் முயற்சித்தார்.

மேலும் நடிகர் திலகம் என பெயர் வாங்கிய சாவித்திரியே குடிப்பழக்கம் கொன்றுவிட்டது. அதுபோல தற்பொழுது ஓவியா குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். ஓவியாவிற்கு ரொம்ப நல்ல மனசு. ஆனால் அவருக்கு வரும் சினிமா வாய்ப்புகளை பலர் தட்டி பறித்து விட்டார்கள். எனவே அந்த துயரத்தில் தான் ஓவியா இதுபோன்று செய்கிறார் என செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.

To Top