யாருமே அந்த விஷயத்தை பாக்கல – பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள சீக்ரெட்

போன மாதம் திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் அதிகமான வரவேற்பை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்திருந்தனர். பார்த்திபன், சரத்குமார் என இன்னும் அதிகமான நடிகர்களும் கூட இந்த படத்தில் நடித்திருந்தனர்.

இதன் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சேந்தன் அமுதன் கதாபாத்திரத்தில் நடித்த அஷ்வின் தனது டிவிட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை ஷேர் செய்துள்ளார்.

யாருமே அந்த காட்சியை கவனிக்கவில்லை. ஆனால் அதில் முக்கியமான ரகசியம் உள்ளது என அவர் கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்த த்ரிஷா “நான் அதை கவனித்தேன்” என கூறியுள்ளார். எந்த விஷயத்தை இவர்கள் பேசுகிறார்கள் என்பது புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Refresh