Hollywood Cinema news
இந்தியர்களின் தீபாவளியை உலகுக்கே காண்பித்த நெட்ப்ளிக்ஸ் – சிலிர்க்க வைக்கும் வீடியோ
தீபாவளி என்பது இந்தியர்களின் பண்டிகைகளிலேயே மிக முக்கியமான பண்டிகையாகும். வேலை செய்யும் இடங்களில் விடுமுறை வாங்கி கொண்டு ஒவ்வொரு இந்தியரும் தனது வீட்டில் குடும்பத்தாருடன் கொண்டாடும் ஒரு பண்டிகையாக தீபாவளி உள்ளது.

தீபாவளியின் முக்கிய நிகழ்வே பட்டாசு வெடிப்பதுதான். ஆனால் இந்தியாவில் மேகாலயாவில் உள்ள சீராபுஞ்சி என்கிற இடத்தில் எல்லா காலங்களிலும் மழை பெய்யும். முக்கியமாக தீபாவளி சமயங்களில் கூட அங்கு மழை பெய்யும்.
ஆனால் அந்த நிலையிலும் கூட அங்கு உள்ள மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
இந்த விஷயத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஒரு வீடியோவாக தயார் செய்து வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளது. நெட்ப்ளிக்ஸ் உலகம் முழுவதும் 100க்கும் அதிகமான நாடுகளில் இருக்கும் நிறுவனம் என்பதால் உலக அளவில் இந்த வீடியோவிற்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
வீடியோவை காண க்ளிக் செய்யவும்
