Connect with us

விஜய் படத்தை காபி அடிச்சு சீரியல் இயக்கிய சன் டிவி!.. கண்டுப்பிடித்த ரசிகர்கள்!..

vijay sun tv

News

விஜய் படத்தை காபி அடிச்சு சீரியல் இயக்கிய சன் டிவி!.. கண்டுப்பிடித்த ரசிகர்கள்!..

Social Media Bar

திரைப்பட பாடல்களை சீரியல்களில் பயன்படுத்தி வருவதற்கே சினிமா ரசிகர்கள் கடுப்பாகி வருகின்றனர். இந்த நிலையில் படங்களின் கதையை தூக்கும் வேலையையும் தற்சமயம் சீரியல்கள் பார்க்க துவங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் சீரியல்களை ஒளிப்பரப்புவதில் சீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி இந்த மூன்று சேனல்களுக்கு இடையேதான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. இதனால் ஞாயிற்று கிழமைகள் கூட விடாமல் சீரியல்களை போட்டு வருகின்றன.

இந்த நிலையில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் மீனா தொடர்தான் தற்சமயம் பேசு பொருளாகி உள்ளது. இந்த சீரியலின் கதைப்படி சிதம்பரம் மற்றும் சத்தியமூர்த்தியின் குடும்பங்கள் பரம எதிரியாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில் அந்த ஊருக்கு டீச்சராக வரும் மீனா என்கிற பெண் அந்த பகையை தடுத்து அந்த குடும்பத்தை சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார். இதற்கு நடுவே அந்த பெண் ஓடிப்போன சிதம்பரத்தின் தங்கையின் மகள் என கூறுகிறார்.

ஆனால் உண்மையில் அவர் சிதம்பரத்தின் தங்கையின் மகள் கிடையாது. கிட்டத்தட்ட இந்த கதையமைப்பு அப்படியே பூவே உனக்காக திரைப்படத்தின் கதை போலவே இருக்கிறது. இப்படி சூப்பர் ஹிட் படங்களின் கதைகளையும் தூக்குவது நியாயமா என இதுக்குறித்து கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.

To Top