News
பிரபல A2D Youtube Channel இன் மாத வருமானம் இவ்வளவா?
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு பல்வேறு வகையில் மக்கள் பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன.
அதனை தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக எப்படி சம்பாதிப்பது என்பது பலரது நோக்கமாக இப்பொழுது இருந்து வருகிறது. அந்த வகையில் யூடியூப் என்பது பணம் சம்பாதிப்பதற்கான மிக முக்கியமான ஒரு இடமாக இருக்கிறது.
youtube இல் பிரபலமான யூடியூப் சேனல்களில் மிக முக்கியமான சேனல் ஏ2டி தொடர்ந்து தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்களை இந்த சேனல் வெளியிட்டு வருகிறது.
பல வருடங்களாக இந்த சேனல் இருந்து வந்தாலும் கூட கடந்த சில வருடங்களாகதான் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நந்தா என்பவர் இந்த சேனலை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் மாதாந்திரமாக இந்த சேனலுக்கு எவ்வளவு வருவாய் வருகிறது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது அதன்படி மாதம் 15 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரையில் இந்த சேனலுக்கு வருவாய் வருவதாக கூறப்படுகிறது.
