Latest News
2 வருடங்கள் பாலைவனத்தில் செத்து பிழைத்தேன்!.. ஆடு ஜீவிதம் நிஜ கதாநாயகன் நஜீப்பின் கதை!.
Aadu Jeevitham : பொதுவாகவே இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு சென்று பணம் ஈட்டுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அப்படி வெளிநாட்டுக்கு செல்பவர்கள் பெரும்பாலும் மலேசியா சிங்கப்பூர் மற்றும் சவுதி நாடுகளுக்கு தான் அதிகமாக வேலைக்கு செல்வார்கள்.
அப்படி வேலைக்குச் சென்று அங்கு ஏமாற்றப்பட்டு மாட்டிக்கொண்ட நபரின் கதைதான் தற்சமயம் திரைப்படமாக வரவிருக்கும் ஆடு ஜீவிதம். இது மலையாளத்தில் ஏற்கனவே நாவலாக வந்து பிரபலம் அடைந்ததை அடுத்து படமாக்கப்பட்டுள்ளது.
1992 ஆண்டு வாக்கில் பிழைப்புக்காக சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்துக்கு சென்ற நஜீப் என்பவரின் வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த நாவல் எழுதப்பட்டது. நடந்த சொந்த அனுபவத்தை நஜீப் கூறும் பொழுது பிழைப்புக்காக தான் நான் அரபு நாட்டுக்கு செல்ல முடிவு செய்தேன்.
முதலில் மும்பை சென்று அங்கிருந்து சவுதி அரேபியாவிற்கு விமானம் மூலமாக சென்றேன். அங்கு ரியாத்தில் இறங்கியதுமே என்னை ஒரு நபர் அழைத்துச் சென்று பாலைவனங்களுக்கு நடுவில் கொண்டு போய் விட்டுவிட்டார்.
அங்கு ஆடுகள் மட்டுமே இருந்தன அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது இந்த பாலைவனத்திற்கு நடுவே நாம் ஆடு மேய்க்க வேண்டும் என்று, அப்போது அங்கு ஏற்கனவே ஒரு நபர் இருந்தார். அவர் தாடி மீசை எல்லாம் பெரிதாக வளர்ந்து பார்க்கவே கொடூரமாக இருந்தார்.
அவரைப் பார்த்ததும் எனக்கு பயம் வந்துவிட்டது பிறகு அன்று முழுவதும் நான் அழுது கொண்டே இருந்தேன். அங்கிருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பதால் அந்த ஆடுகளை வைத்துக்கொண்டு அங்கேயே இருந்து கொண்டிருந்தேன். அங்கு ஆடுகளுக்கு பால் கறக்க வேண்டும் பிறகு ஆடுகளை வந்து பிடித்துக் கொண்டு செல்வார்கள்.
அப்பொழுது அவர்கள் கூறும் ஆடுகளை நான் பிடித்துக் கொடுக்க வேண்டும் இதுதான் எனக்கு வேலையாக இருந்தது. வேலைகளை நான் தவறாக செய்யும்போதெல்லாம் அவர்கள் என்னை அடித்தார்கள். சாப்பிட உணவு கூட கிடைக்காமல் ஆட்டுப்பாலை கறந்து குடிக்கும் நிலையில் இருந்தேன்.
குடிப்பதற்கு தண்ணீர் சரியாக கிடைக்காது என்பதால் நான் குளிப்பதே கிடையாது. இந்த நிலையில் தாடி மீசை எல்லாம் வளர்ந்து உடல் ஒல்லியாகி பார்க்கவே மோசமான நிலைக்கு மாறினேன். இந்த நிலையில் எப்படியாவது இந்த இடத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று பாலைவனத்தில் ஒரு நாள் ஓட துவங்கினேன்.
ஒன்றரை நாட்கள் ஓடிய பிறகு கேரளாவை சேர்ந்த ஒரு நபர் அங்கு ஓட்டல் வைத்திருந்தார். அவர் எனக்கு உதவி செய்தார் அதன் பிறகு பாஸ்போர்ட் விசா எல்லாம் உரிமையாளரிடம் இருந்ததால் அங்கிருந்த போலீசார் என்னை கைது செய்து இந்தியாவுக்கே திரும்ப அனுப்பினர். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய பிறகு அங்கிருந்து ஊருக்கு வர வழியில்லாமல் இருந்த போது ஒருவர் டிக்கெட் எடுத்து கொடுத்ததன் மூலமாக சொந்த ஊருக்கு திரும்பினேன்.
அதன் பிறகும் 20 ஆண்டுகள் நான் திரும்ப வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்தேன் அதன் மூலம் எனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்பினேன். எனது மகளுக்கு திருமணம் செய்து இருக்கிறேன் இந்த நிலையில் தான் எழுத்தாளர் பென்யாமினிடம் இந்த செய்திகளை பகிர்ந்திருந்தேன் அதை அவர் ஆடு ஜீவிதம் என்று நாவலாக வெளியிட்டார் என்று கூறியிருக்கிறார் நஜிப்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்