கலெக்‌ஷனில் மஞ்சுமல் பாய்ஸை ஓரம் கட்டிய ஆடுஜீவிதம்!.. சொல்லி அடிக்கும் மலையாள சினிமா!..

கடந்த ஒரு மாதமாக தமிழ்நாடு மற்றும் கேரள மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்த விஷயமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருந்தது. வாழ்வதற்கான போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வந்த திரைப்படங்கள் பல உண்டு.

ஆனால் அவற்றில் மஞ்சுமல் பாய்ஸ்க்கு மட்டும் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருப்பதற்கு காரணம் அதன் திரைக்கதையே என கூறப்படுகிறது. கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு பயணம் சென்ற நண்பர்கள் குழுவில் ஒருவர் குணா குகையில் மாட்டிக்கொள்ள அவரை காப்பாற்றுவதுதான் கதையாக இருக்கிறது.

manjummel boys
manjummel boys
Social Media Bar

இது உண்மையிலேயே நடந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் பிரபலமாக துவங்கியப்பிறகு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் லாபமீட்டியது. தொடர்ந்து அதை தற்சமயம் தெலுங்கு மொழியிலும் வெளியிட இருக்கின்றனர்.

வசூலை மிஞ்சிய ஆடுஜீவிதம் திரைப்படம்:

இந்த நிலையில் அதே மாதிரி உயிர் வாழ்வதற்கான போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வந்த திரைப்படம்தான் ஆடு ஜீவிதம். சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு செல்லும் நஜீப் என்னும் இளைஞன் அந்த பாலைவனத்தில் இருந்து தப்பிப்பதை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவும் நிஜமாக நடந்த கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான். இந்த நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் 100 கோடி வசூலை பெறுவதற்கு 12 நாட்கள் தேவைப்பட்டது.

aadujeevitham
aadujeevitham

ஆனால் ஆடுஜீவிதம் திரைப்படம் 9 நாட்களிலேயே அந்த வசூலை பெற்றுள்ளது. கேரள சினிமாவில் வேறு எந்த ஒரு திரைப்படமும் இவ்வளவு குறுகிய காலத்தில் 100 கோடி ரூபாய் வசூல் செய்வது அரிதான விஷயம் என கூறப்படுகிறது. தொடர்ந்து மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தை விடவும் ஆடுஜீவிதம் அதிக வசூலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.