முத்தையா படத்தில் நடிக்க வாய்ப்பு?.. கதாநாயகியாக களம் இறங்கும் ஆல்யா மானசா..!
தற்சமயம் சின்னத்திரையிலேயே அதிக வருமானம் வாங்கும் ஒரு நடிகையாக ஆல்யா மானசா இருந்து வருகிறார். ஆலியா மானசா வெகு வருடங்களாகவே பிரபலமாக இருந்து வருகிறார்.
விஜய் டிவியில் சின்ன திரையில் இருந்து வருகிறார். விஜய் டிவியில் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த அவர் தற்சமயம் சன் டிவியில் நடித்து வருகிறார் இன்னும் இவருக்கு நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன அவரது கணவரும் சீரியல்களில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார்.
ஆல்யா மானசா:

இதனால் அதிகமான சொத்துக்களை கொண்ட நடிகையாக ஆல்யா மானசா இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு சினிமாவிலும் நடிக்க ஆசை இருப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவரிடம் மதுரை சார்ந்த கிராமப் பெண் என்பது போன்ற கதாபாத்திரங்கள் இருந்தால் நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஆல்யா மதுரை மக்களின் அன்பை நான் தெரிந்து கொண்டேன். கண்டிப்பாக மதுரை பெண்ணாக நடிக்க வேண்டும் என்றால் நான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். அதிகபட்சம் முத்தையா மாதிரியான இயக்குனர்கள் திரைப்படங்களில் நடிகைகளின் கதாபாத்திரம் ஆலியா மானசா எதிர்பார்ப்பது போல தான் இருக்கும் எனவே அவர் முத்தையா திரைப்படங்களில் நடிப்பதற்கு கூட வாய்ப்புகள் உண்டு என்று பேச்சுக்கள் இருக்கின்றன.