24 வயதிலேயே டூரிஸ்ட் ஃபேமிலி என்கிற ஒரு திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனராக மாறியிருக்கிறார் அபிஷன் ஜீவந்த்.
முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் நன்றாக ஓடினால் கதாநாயகனை மட்டுமே பாராட்டி வந்தனர் ஆனால் இப்பொழுதெல்லாம் இயக்குனர் வரை அனைவரையுமே பார்க்க துவங்கியிருக்கின்றனர் மக்கள்.
அதேபோல டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திலும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அபிஷன் ஜீவந்த். இந்த நிலையில் அடுத்து அவர் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தது.
இதனை தொடர்ந்து இப்பொழுது நடிகர் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இணை தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக களம் இறங்குகிறார் அபிஷன்.
இந்த படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை படத்தில் கதாநாயகியாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார் கண்டிப்பாக இந்த படம் அபிஷனுக்கு ஒரு வரவேற்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.