Connect with us

எல்லாருக்கும் உள்ள விஷயம்.. என் பொண்ணுகிட்ட இல்ல.. மனம் திறந்த அபிஷேக் பச்சன்..!

Tamil Cinema News

எல்லாருக்கும் உள்ள விஷயம்.. என் பொண்ணுகிட்ட இல்ல.. மனம் திறந்த அபிஷேக் பச்சன்..!

Social Media Bar

சமூக வலைத்தளங்களின் தாக்கங்கள் என்பது பிரபலங்களை எவ்வளவு பாதிக்கிறதோ அதைவிட அதிகமாக பிரபலங்களின் பிள்ளைகளை பாதிக்கிறது.

ஏனெனில் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்களோ அல்லது ஏதாவது ஒரு வதந்தியோ வந்த வண்ணம் இருந்து கொண்டு தான் இருக்கும்.

அவற்றையெல்லாம் அவர்கள் ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு பழகி இருப்பார்கள் ஆனால் அவர்களது பிள்ளைகள் அப்படி இருக்க மாட்டார்கள். அவர்கள் சிறு வயது குழந்தைகளாக இருப்பதால் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாது என்று கூறலாம்.

இது பிரபலங்களுக்கு பெரிய பிரச்சனை ஆகத்தான் இருந்து வருகிறது. நடிகர் சூர்யா ஜோதிகா கூட மும்பையில் சென்று அங்கு தனது குழந்தைகளை படிக்க வைப்பதற்கு இதுதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அபிஷேக் பச்சன் தனது மகள் ஆராத்யா குறித்து சமீபத்தில் பேசியிருந்தார். அப்போது அவரிடம் உங்களது மகள் வளர்ந்து விட்டார் ஆனால் கூட அவரை எந்த சமூக வலைதளங்களிலும் இப்போது வரை பார்க்க முடியவில்லையே என்று கேட்டுள்ளனர்.

அதற்கு பதில் அளித்த அபிஷேக் பச்சன் எனது மகளிடம் முதலில் மொபைல் போனே கிடையாது. இப்பொழுது வரை அவருக்கு மொபைல் போன் கொடுக்காமல் தான் வளர்த்து வருகிறோம். சிறுவயதிலிருந்தே அவளிடம் ஒரு பிரபலம் என்பதெல்லாம் நாங்கள் சொல்லி வளர்க்கவில்லை.

இந்த சமூக வலைத்தளங்கள் போன்ற விஷயங்களில் இருந்து தனித்திருப்பதுதான் அவளுக்கு நல்லது என்று பகிர்ந்திருக்கிறார் அபிஷேக் பச்சன். இப்பொழுது சின்ன குழந்தைகள் கூட கையில் மொபைல் ஃபோனை வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய மகளை மொபைலுக்கு அடிமையாகாமல் வளர்த்திருக்கிறார் அபிஷேக் பச்சன் என்று பலரும் இது குறித்து அவரை பாராட்டி வருகின்றனர்.

To Top