News
இதையே வேற யாராவது பண்ணிருந்தா கேஸ் ஆகியிருக்கும்.. அஜித்தின் சமீபத்திய வீடியோவால் வந்த பிரச்சனை..
தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் அஜித் பல தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் பல மோட்டார் பந்தயங்களிலும் அதிக முனைப்புடன் கலந்து கொள்ளுவார்.
சமீபத்தில் இவர் அதிவேகமாக கார் ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பல கருத்துக்களை தெரிவித்து வருவது தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பாகவே பல விளம்பரம் படங்களில் நடித்து வந்த அஜீத் 1992ல் பிரேம புத்தகம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். இதனால் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது.

தமிழில் அமராவதி என்ற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் இவருக்கு வெற்றி கொடுக்கவில்லை. இந்நிலையில் அதே ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்களில் பவித்ரா என்ற திரைப்படம் மட்டும் குறிப்பிட்ட வரவேற்பை பெற்றது.
தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திக் கொள்வதற்கு பல கஷ்டங்களைக் கடந்த அஜித் ஆசை திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது மோட்டார் பந்தயத்தில் கலந்துகொண்டு படுகாயம் அடைந்தார். அதன் பிறகு சிறிது காலம் இடைவெளி விட்டு அந்த படத்தில் நடித்து மாபெரும் வெற்றி அடைந்தது.
காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், தீனா, சிட்டிசன், ரெட், வில்லன் போன்ற பல வெற்றி படங்களை நடிகர் அஜித் தற்போது வரை கொடுத்து வரும் நிலையில் இவர் படங்களில் பல ரிஸ்க்கான காட்சிகளை இவரே நடிப்பார்.
அதிவேகத்தில் பறந்த நடிகர் அஜித்
கார், மோட்டார் வாகனங்களில் மீது அதிகம் ஈர்ப்பு உள்ள நடிகர் அஜித் பட சூட்டிங் எல்லாம் முடித்துவிட்டு மோட்டார் பந்தயங்களில் கலந்து கொள்வதற்காக சென்று விடுவார்.

சமீபத்தில் கூட இவர் புதிய கார் ஒன்று வாங்கியிருந்த நிலையில் அது சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது காரில் 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காரை ஓட்டி செல்வது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
இதுவே இந்த வேகத்தில் மற்ற டிடிஎஃப் வாசன் போன்றோர் ஓட்டி வீடியோ வெளியிட்டு இருந்தால், இந்நேரம் என்ன ஆயிருக்கும் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
