Connect with us

துபாய்ல இருந்து இந்தியா வர்றது அவ்வளவு கஷ்டமா!.. இரங்கல் தெரிவித்த அஜித்தை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்!..

vijayakanth ajith

News

துபாய்ல இருந்து இந்தியா வர்றது அவ்வளவு கஷ்டமா!.. இரங்கல் தெரிவித்த அஜித்தை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்!..

Social Media Bar

Actor Ajith : நேற்று நடிகர் விஜயகாந்தின் இறப்பு நடந்தது முதல் தமிழ் சினிமாவே மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. மக்கள் பலரும் விஜயகாந்தின் உடலை காண்பதற்கு அலை கடலென திரண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.

இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது இந்த நிலையில் இவ்வளவுக்கு மத்தியிலும் சில நடிகர்கள் சில சூழ்நிலைகளால் வர முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. உள்ளூரில் இருந்த சில நடிகர்கள் வராமல் இருந்தனர்.

அதில் முக்கியமானவர் வடிவேலு. வடிவேலு நன்றி மறந்து செயல்படுகிறார் அவருக்கு ஆரம்பத்தில் அதிக வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்த விஜயகாந்தை அவர் பார்க்க வரவில்லை என்று பலரும் வடிவேலுவை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Vijayakanth-1-1
Vijayakanth-1-1

இந்த நிலையில் முன்னணி நடிகரான அஜித் இந்த இறப்பிற்கு வரவில்லை அவர் விடாமுயற்சி பட பிடிப்புக்காக துபாய் சென்றிருக்கிறார். துபாயில் படப்பிடிப்பும் நடந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா விஜயகாந்த்தை தொடர்பு கொண்ட அஜித் இரங்கல் தெரிவித்ததுடன் தன்னால் இறப்பிற்கு வர முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இந்த செய்தி பரவ தொடங்கியவுடன் இதனால் கோபமான சிலர் இது குறித்து கேள்வி கேட்க துவங்கியுள்ளனர். நேற்று காலையே விஜயகாந்தின் மரணம் நிகழ்ந்திருக்கும் பொழுது நேற்று இரவு கிளம்பி இருந்தால் கூட இன்று காலை அஜித் இந்தியாவிற்கு வந்திருக்க முடியும். பெரும்புள்ளிகள் எல்லாம் மிக எளிதாகவே டிக்கெட் விசா போன்றவற்றை பெற முடியும்.

ajith-1
ajith-1

அப்படி இருந்தும் அஜித் ஏன் வரவில்லை? அது இல்லாமல் இதுவரை அவர் எந்த போது நிகழ்ச்சிகளிலும் தலையிட்டது கிடையாது என்னும்போது உள்ளூரிலேயே இருந்திருந்தாலும் கூட அவர் விஜயகாந்தின் இறப்பிற்கு வந்திருக்க மாட்டார் என்று விமர்சிக்க துவங்கி இருக்கின்றனர்

To Top